/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா
சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா
சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா
சக்தி மாரியம்மன் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா
ADDED : செப் 11, 2025 09:22 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஆ.சங்கம்பாளையம் விநாயகர், சக்தி மாரியம்மன், முருகப்பெருமான் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷக விழா, கடந்த, 9ம் தேதி வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்கியது.
நேற்றுமுன்தினம், கணபதி ேஹாமம், யாக பூஜைகள், முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, விநாயகர் பூஜை, வேதிகார்ச்சனை, ேஹாமங்கள், 108 மூலிகை பொருட்கள் குண்டத்தில் சமர்பித்தல், மஹா பூர்ணாஹுதி, யாத்தர தானம், கலசங்கள் வலம் வருதல் பூஜை நடந்தது.
காலை, 9:30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம் நடைபெற்றது. 10:30 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம், மஹா அபிேஷகம், கோ பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.
கும்பாபிேஷக விழாவையொட்டி, அப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள், மஸ்ஜிதே நுார் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலில் இருந்து சீர் கொண்டு வந்தனர். அவர்களை விழாக்குழுவினர் வரவேற்று, மரியாதை செய்தனர்.