Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீரமாச்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் மஹா கும்பாபிஷேகம்

வீரமாச்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் மஹா கும்பாபிஷேகம்

வீரமாச்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் மஹா கும்பாபிஷேகம்

வீரமாச்சி அம்மன் கோவிலில் பிப்., 1ல் மஹா கும்பாபிஷேகம்

ADDED : ஜன 26, 2024 11:32 PM


Google News
நெகமம்: நெகமம், வீரமாச்சி அம்மன் கோவிலில், வரும் பிப்., 1ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

நெகமம் வீரமாச்சி அம்மன் கோவிலில், கடந்த 15ம் தேதி, கும்பாபிஷேக விழா முளைப்பாரிகை போடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. வரும் 30ம் தேதி, காலை மங்கள இசை, திருவிளக்கு வழிபாடு, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், புண்யாஹவாசம், கணபதி ஹோமம், திரவியாஹுதி, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை மற்றும் பிராசதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தலைவாசலில் இருந்து மேள வாத்தியம் முழங்க தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்வு நடக்கிறது. மாலையில், பஞ்ச கவ்ய பூஜை, வாஸ்து பூஜை மற்றும் பிரவேச பலி நடக்கிறது. அதன்பின், யாக சாலை பிரவேசம், முதல் கால பூஜை துவக்கம், சோம கும்ப பூஜை, தீபாராதனை நடக்கிறது.

வரும், 31ம் தேதி, காலை திருப்பள்ளி எழுச்சி, விக்னேஷ்வர பூஜை, இரண்டாம் கால யாகம், தீபாராதனை மற்றும் உபசாரம் நடக்கிறது. மதியம் சிலைகளுக்கு பிம்ப சக்தி செய்து சயனாதி வாசம் நிகழ்வு நடக்கிறது. மாலையில், மூன்றாம் கால யாகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு வீரமாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு எந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன எண்வகை மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.

பிப்., 1ம் தேதி, காலை 5:00 மணிக்கு, துவார பூஜை, பஞ்சகவ்ய பூஜை, பூர்ணாஹுதி நடக்கிறது. காலை 9:00 முதல் 10:30 மணி வரை, யாத்தர தானம், கடம் புறப்பாடு, வீரமாச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. சுவாமிக்கு, மஹா அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us