/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிேஷகம்சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிேஷகம்
சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிேஷகம்
சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிேஷகம்
சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் வரும் 26ல் மஹா கும்பாபிேஷகம்
ADDED : பிப் 23, 2024 11:04 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, புரவிபாளையம் சீதா ராமர், லட்சுமணர் கோவிலில் மஹா கும்பாபிேஷக விழா வரும், 26ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி, புரவிபாளையத்தில், சீதா ராமர், லட்சுமணர் கோவில் மஹா கும்பாபிேஷக விழா இன்று, மாலை, 4:00 மணிக்கு சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
நாளை (25ம் தேதி) காலை, 8:30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, மஹா கணபதி ேஹாமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், முளைப்பாரி எடுத்தலை தொடர்ந்து, மதியம், 2:00 மணிக்கு மூலமூர்த்தி மற்றும் பரிவாரங்களுக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம் நடக்கிறது.
மாலை, 4:00 மணிக்கு வாஸ்துசாந்தி, துவாரபூஜை, முதற்கால ேஹாமம் நடக்கிறது. இரவு, 9:00 மணிக்கு விமான கலசம் பிரதிஷ்டை, யந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.வரும், 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு துவார பூஜை, திருபள்ளியெழுச்சி, வேதிகார்ப்பனம், இரண்டாம் கால ேஹாமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும்; காலை, 8:45 மணிக்கு மேல், 9:20 மணிக்குள், யாத்ரதானம், மஹா கும்பாபிேஷகம், மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. அதன்பின், அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவை முன்னிட்டு, நாளை இரவு, 7:30 மணிக்கு புரவிபாளையம் காத்தவராயன் கும்மி பாட்டு நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.