ADDED : ஜன 04, 2024 09:06 PM
பொள்ளாச்சி;தேசிய பசுமைப்படை மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்ட சேவாலயம் டிரஸ்ட் சார்பில், நிலையான வாழ்க்கை முறை பயிற்சி முகாம், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் இன்று நடக்கிறது.
பயிற்சி முகாமில், முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசுகின்றனர். 100 பள்ளி மாணவர்கள், 50 ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கழிவு மேலாண்மை, மரம் நடும் முறை, காகித பை தயாரித்தல், கழிவு துணியை மறுசுழற்சி செய்தல், விதைபந்துகள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.