/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்'க்கு பெங்களூருவில் அலுவலகம் 'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்'க்கு பெங்களூருவில் அலுவலகம்
'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்'க்கு பெங்களூருவில் அலுவலகம்
'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்'க்கு பெங்களூருவில் அலுவலகம்
'எல்ஜி எக்யூப்மென்ட்ஸ்'க்கு பெங்களூருவில் அலுவலகம்
ADDED : மே 10, 2025 01:15 AM
கோவை : ஏர் கம்பரசர் உற்பத்தியில், உலகளாவிய முன்னணி நிறுவனமான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், பெங்களூரு, அசோக் நகரில் உள்ள ரிச்மண்ட் சாலையில், அதன் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறந்துள்ளது.
ஆறு தளங்களை கொண்ட இந்த அலுவலகமானது, அதிக ஆற்றல் சேமிப்பு திறனுள்ள எல்.இ.டி., விளக்குகள், ஆற்றல் திறனுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் கட்டடத்தின் மேல்தளத்தில் சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது.
எதிர்காலத் திட்டங்களை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலக துவக்க விழாவில், எல்ஜி நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


