Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடலுக்குள் ஒரு பயணம் குட்டீசுடன் குதுாகலிக்கலாம்!

கடலுக்குள் ஒரு பயணம் குட்டீசுடன் குதுாகலிக்கலாம்!

கடலுக்குள் ஒரு பயணம் குட்டீசுடன் குதுாகலிக்கலாம்!

கடலுக்குள் ஒரு பயணம் குட்டீசுடன் குதுாகலிக்கலாம்!

ADDED : ஜூன் 27, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
குடும்பத்துடன் சென்று ஒருநாள் பொழுதை குதுாகலமாக கழிக்க விருப்பம் உள்ளவர்கள், கோவை கொடிசியா மைதானத்தில், அண்டர் வாட்டர் வண்ண மீன்கள் கண்காட்சியை கண்டுகளிக்கலாம்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அதிகம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில், பறவைகள் வனம், செயற்கை மலர்கள் வனம், நடனமாடும் ரோபோ நாய்கள் மற்றும் கடலில் நீந்தும் கடல் கன்னிகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மீன்கள் நீந்தும் அக்வாரியம் என, பல பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

தலைக்கு மேலும், பக்கவாட்டிலும் வண்ண மீன்கள் நீந்தும் காட்சியை பார்த்து பார்வையாளர்கள் பரவசம் அடைக்கின்றனர். பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடும் ரோபோடிக் நாய்கள் குழந்தைகளை குதுாகலப்படுத்துகின்றன. பறக்கும் முத்தம் கொடுக்கும் கடல் கன்னிகளுடன், இளைஞர்களுக்கு செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

வண்ணக் கிளிகளின் சரணாலயம், மலைப் பாம்புகள், இருவானா பட்டாம்பூச்சி ஊஞ்சல் மற்றும் பாய் மரக்கப்பல் என, பல விஷயங்கள் இருப்பதால் பாார்வையாளர்கள் குடும்பத்துடன் ஜாலியாக பொழுது போக்கலாம். மேலும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த மெகா பர்னிச்சர் அரங்கு, உணவு அரங்கம் என, பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அப்புறமென்ன...இன்றும் நாளையும் சும்மா ஜமாயுங்க!

மாணவர்கள், 50 பேர் வந்தால், 50 சதவீதம் டிக்கெட் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. நுழைவு கட்டணம், 5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரையும் கண்காட்சியை பார்வையிடலாம்.

-சந்தோஷ்

மேலாளர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us