ADDED : ஜூலை 02, 2025 09:55 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுஒருபுறமிருக்க சாலையோர ஆக்கிரமிப்பு, விதிமீறிய 'பார்க்கிங்' உள்ளிட்ட பல சவால்கள் எதிர்கொண்டு, மக்கள் பலரும் சாலையை கடக்கினறனர்.
குறிப்பாக, பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் மக்கள், சாலையை கடக்க முடியாமல் திணறுகின்றனர். எனவே, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், எளிதாக சாலையை கடக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.