தேவையான பொருட்கள்
n பப்பாளி - 2 n சர்க்கரை - 200 கிராம் n நெய் - 2 ஸ்பூன் n மஞ்சள் துாள் - அரை ஸ்பூன் n தண்ணீர் - 2 டம்ளர் n ஏலக்காய் - ஒரு சிட்டிகை n பாதாம், முந்திரி - சிறிது.
செய்முறை
பப்பாளி பழத்தின் தோலை நீக்கி, அதை இரண்டாக நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்க வேண்டும். பின்னர் பப்பாளியை கேரட் உரசுவது போல் துருவிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் துாள் மற்றும் துருவி வைத்திருக்கும் பப்பாளியை சேர்க்க வேண்டும்.
நான்கு நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் இருக்கட்டும். பிறகு இதை வடிகட்டியை பயன்படுத்தி தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் நெய்யை ஊற்ற வேண்டும். நெய் உருகியதும் வடிகட்டி வைத்திருக்கும் பப்பாளியை அதில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
இரண்டு நிமிடம் கிளறிய பிறகு சர்க்கரையை சேர்த்து, கைபடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு நெய் பிரிந்து வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு ஏலக்காய் துாள் துாவி, இரண்டு கிளறு, கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். சிறிது சூடாக இருக்கும் பொழுது லட்டாக உருண்டை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அலங்காரத்திற்கு லட்டிற்கு மேலே பாதாம் முந்திரி போன்ற ஏதாவது ஒரு பருப்பு வகைகளை வைக்கலாம். சுவையான ஆரோக்கியமான பப்பாளி லட்டு தயாராகி விட்டது