/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழையால் ரோட்டில் பெரும் பள்ளங்கள்; குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கம் மழையால் ரோட்டில் பெரும் பள்ளங்கள்; குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கம்
மழையால் ரோட்டில் பெரும் பள்ளங்கள்; குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கம்
மழையால் ரோட்டில் பெரும் பள்ளங்கள்; குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கம்
மழையால் ரோட்டில் பெரும் பள்ளங்கள்; குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தேக்கம்
ADDED : ஜூன் 30, 2025 10:27 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில் பெய்த மழைால், ரோட்டில் மழை நீர் தேங்கியும், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாலும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம், 147.78 கி.மீ., துாரத்துக்கு ரோடுகள் உள்ளன. அதில், நகராட்சி எல்லைக்குள், 11.50 கி.மீ., நீளமுள்ள சாலைகள் நெடுஞ்சாலைத் துறையினராலும், 5 கி.மீ., நீளமுள்ள சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் வாயிலாகவும் பராமரிக்கப்படுகிறது.
இருப்பினும், ரோடுகள் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், உடுமலை, கோவை நோக்கிய ரோடுகள், குண்டும் குழியுமாக மாறி விட்டது. அதேபோல, மழையின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்காமல், ரோட்டின் நடுவே மண் அரிப்பு காரணமாக, பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. கந்தசாமி பூங்கா ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, தெப்பக்குளம் வீதி, ராஜாமில்ரோடு உள்ளிட்ட பல இடங்களில், ரோட்டில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
அதேநேரம், தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைவெள்ளம் வடியாமல் இருப்பதால், மக்கள் பாதிப்பு அடைகின்றனர். அவ்வழித்தடத்தை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சுற்றுப்பகுதி கிராமங்களில், மழை பெய்தால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. வடிந்து செல்ல நீண்ட நாட்கள் ஆவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது.
குறிப்பாக, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ேஹப்பிகார்டன் குடியிருப்பு பகுதியில், மழை வெள்ளம் தேங்குவதால், பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல, நடுப்புணி ரோட்டில் ஆர்.பொன்னாபுரம் பிரிவு அருகே, மழைவெள்ளம் ரோட்டை ஆக்கிரமித்து குளம் போல தேங்கி விடுகிறது.
மக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகரப்பகுதியில், பெரும்பாலான ரோடுகளில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டு, கரடுமுரடாக மாறியுள்ளது. ரோடு சேதமடைந்த பகுதிகளில், மழைநீர் தேங்கி நிற்கிறது. சில ரோடுகளில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல், ஜல்லிக்கற்களுடன் 'எம்சாண்ட்' சேர்த்து, பள்ளங்கள் மூடப்படுகிறது. முறையாக, 'பேட்ச் ஒர்க்'கும் செய்யப்படவில்லை.
தொடரும் மழையால், பெரும்பாலான ரோடுகள் மோசமாக மாறி வருகிறது. நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.