ADDED : ஜூன் 26, 2025 11:57 PM
கோவை; அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரையிலான புதிய நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது.
கோவை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் பிரிவு நில அளவையர் கண்ணன், அன்னூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபு, கிராம உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையின் அகலம் எவ்வளவு என நேற்று அளவீடு செய்தனர்.
நான்கு வழி சாலை அமைத்த பின்பு கழிவுநீர் வடிகாலுக்கு இடம் இல்லாத பகுதிகளில், நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.