/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முனியப்பச்சி கோவிலில் வரும் 11ல் கும்பாபி ேஷகம்முனியப்பச்சி கோவிலில் வரும் 11ல் கும்பாபி ேஷகம்
முனியப்பச்சி கோவிலில் வரும் 11ல் கும்பாபி ேஷகம்
முனியப்பச்சி கோவிலில் வரும் 11ல் கும்பாபி ேஷகம்
முனியப்பச்சி கோவிலில் வரும் 11ல் கும்பாபி ேஷகம்
ADDED : பிப் 06, 2024 01:42 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சின்னாம்பாளையத்தில், விநாயகர், கிருஷ்ணர், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், மதுரைவீரன், முனியப்பச்சி சுவாமி கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு கரிக்கோல ஊர்வலத்துடன் துவங்குகிறது.
விழாவை முன்னிட்டு, மாலை, 3:00 மணிக்கு தீர்த்த கலசங்கள் மற்றும் முளைப்பாலிகை அழைத்தல் நகிழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, மாலை, 6:30 மணி முதல் திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், இரவு, 7:30 மணிக்கு முளைப்பாலிகை வழிபாடு, காப்பணிவித்தல், வாயிற்காவலர் வழிபாடு, முதற்கால வேள்வி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இரவு, 9:30 மணிக்கு எண்வகை மருந்து சாற்றி கருவறையில் நிலைப்படுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 11ம் தேதி காலை, 6:30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, காலை, 7:40 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, திரவியாஹுதி, நாடிச்சந்தானம், பேரொளி வழிபாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு திருக்குடங்கள் ஞானத்திருவுலா நிகழ்ச்சியும், காலை, 10:30 மணிக்கு விமான கோபுர மஹா கும்பாபிேஷகம், மூல ஆலய, பரிவார சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.
காலை, 11:00 மணிக்கு மகா அபிேஷகம், காலை, 11:30 மணிக்கு தசதரிசனம், அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.