/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம் சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
சித்தி விநாயகர் கோவிலில் வரும் 8ல் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 01, 2025 11:14 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி, மின்நகர் ஸ்ரீ சித்தி விநாயாகர் கோவில் கும்பாபிேஷக விழா, வரும், 8ம் தேதி நடக்கிறது.
இதையொட்டி, வரும் 6ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஹா கணபதி ேஹாமம், மாலை, 4:30 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, மஹா சங்கல்பம், புண்யாக வாச்சனம், நவகவ்யம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹனம், அங்குரார்ப்பனம், ரஷாபந்தனம்; மலை, 6:30 மணிக்கு கலாகர்சனம், யாகசாலை பிரவேசம் நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாச்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, இரண்டாம் காலம் ேஹாமம் ஆரம்பம், 108 மூலிகை திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசார பூஜை நடக்கிறது.
மாலை, 6:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, புண்யாக வாச்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, மூன்றாம் கால ேஹாமம் ஆரம்பம், 108 மூலிகை திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, உபசார பூஜை நடக்கிறது.
இரவு, 9:00 மணிக்கு சுவாமி விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 8ம் தேதி காலை, 5:30 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, சங்கல்பம், உள்ளிட்டவைகளை தொடர்ந்து, நான்காம்கால ேஹாமம் ஆரம்பம், நாடி சந்தனம், ஸ்பர்ஸாஹுதி, தக்வாச்சனை, 108 மூலிகை திரவியாஹுதி, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, உபசார பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
காலை, 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து, மூலாலைய புனருத்தாரண கும்பாபிேஷகம் மற்றும் புதிய பரிவார மூர்த்திகளான ஞானசரஸ்வதி, சுப்ரமணியர், தட்ஷணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கா பரமேஸ்வரிக்கு நுதன அஷ்டபந்தன கும்பாபிேஷகம் நடக்கிறது.