/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேசிய சைக்கிளிங் போட்டியில் கிருஷ்ணம்மாள் மாணவிக்கு வெள்ளி தேசிய சைக்கிளிங் போட்டியில் கிருஷ்ணம்மாள் மாணவிக்கு வெள்ளி
தேசிய சைக்கிளிங் போட்டியில் கிருஷ்ணம்மாள் மாணவிக்கு வெள்ளி
தேசிய சைக்கிளிங் போட்டியில் கிருஷ்ணம்மாள் மாணவிக்கு வெள்ளி
தேசிய சைக்கிளிங் போட்டியில் கிருஷ்ணம்மாள் மாணவிக்கு வெள்ளி
ADDED : பிப் 12, 2024 12:56 AM

கோவை;ஜார்கண்டில் நடந்த தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில், கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் வென்று அசத்தினார்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான 67வது எஸ்.ஜி. எப்.ஐ., தேசிய போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். தமிழக அணியில் கிருஷ்ணம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12ம் வகுப்பு படிக்கும் பூஜா சுவேதா தேர்வானார்.
தேசிய போட்டியில் பங்கேற்ற பூஜா சுவேதா, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 500மீ., டைம் டிரையல் போட்டியில், 41.47 விநாடிகளில் இலக்கை கடந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டீம் பெர்ஸ்யூட் பிரிவிலும், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தேசிய போட்டியில், இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற கோவை மாணவியை, கிருஷ்ணம்மாள் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.