/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்' 'பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்'
'பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்'
'பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்'
'பக்தியுடன் இணையும் அறிவு ஞானமாக மாறும்'
ADDED : ஜூன் 12, 2025 11:45 PM

கோவை; ''ஆன்மிகம் இல்லாத அறிவு அகங்காரமாக மாறும். பக்தியுடன் இணைந்தால், அது ஞானமாக மாறும்,'' என, மகாராஷ்டிரா கவர்னர் ராதா கிருஷ்ணன் பேசினார்.
கோவை எட்டிமடை அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில், சத்கமயா, 2025 கலாசார முகாம் நேற்று துவங்கியது.
முகாமை மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில்,''நவீன அறிவியல், ஆட்சி மற்றும் நெறிமுறை வாழ்க்கைக்கு பாரதத்தின் பாரம்பரிய ஞானம் வழிகாட்டுகிறது. ஆன்மிகம் இல்லாத அறிவு அகங்காரமாக மாறும். பக்தியுடன் இணைந்தால், அது ஞானமாக மாறும். பூஜ்யத்தின் கருத்து, நெறிமுறை கட்டமைப்புகள் மற்றும் மேம்பட்ட உலோகவியல் நடைமுறைகளில் இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளது. கலாசார மதிப்புகள் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடித்தளமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்,'' என்றார்.
மூன்று நாட்கள் நடக்கும், சத்கமயா, 2025 நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை விளக்கங்கள், சிறப்புரைகள் மற்றும் கலாசார அமர்வுகள் நடக்க உள்ளன.
கற்பித்தலின் நோக்கம், இதயத்தின் அழைப்பு, அறிவியல் மற்றும் ஆன்மிகம் குறித்த அம்மாவின் கண்ணோட்டம், மற்றும் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக கலாசாரம், ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் நடக்க உள்ளன.