/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரள வாடல் நோய்; அதிகாரிகள் குழு ஆய்வு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க திட்டம் கேரள வாடல் நோய்; அதிகாரிகள் குழு ஆய்வு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க திட்டம்
கேரள வாடல் நோய்; அதிகாரிகள் குழு ஆய்வு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க திட்டம்
கேரள வாடல் நோய்; அதிகாரிகள் குழு ஆய்வு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க திட்டம்
கேரள வாடல் நோய்; அதிகாரிகள் குழு ஆய்வு அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க திட்டம்
ADDED : ஜன 06, 2024 01:29 AM
பொள்ளாச்சி;'கேரள வாடல் மற்றும் வெள்ளை ஈ நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த, அனுசரணை ஆராய்ச்சி திடல்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அதிகாரிகள் குழுவினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தப்பட்டைகிழவன்புதுார், சுப்பேகவுண்டன்புதுார் மற்றும் அம்பராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் குழு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரி ஹனுமந்த கவுடா, இயக்குனர் பிரமோத்கொரியன், காயங்குளம் மத்திய பனை பயிர் ஆராய்ச்சி நிலையம் டாக்டர் ரெஜிதாமஸ், தென்னை வளர்ச்சி வாரிய மண்டல இயக்குனர் அறவாளி, தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்.
ஆய்வின் போது, விவசாயிகள், 'கேரள வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதை கட்டுப்படுத்த தொழில்நுட்பங்கள், இடுபொருட்களை வழங்க வேண்டும்.
இந்த நோய்களை தாங்கி வளரக்கூடிய மரக்கன்றுகளை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம், பொள்ளாச்சியில் அமைக்க வேண்டும்,' என்றனர்.
தொடர்ந்து, ஆய்வு செய்த அதிகாரிகள், கள ஆய்வு மற்றும் இந்நோய்கள் தாக்குதல்களை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்து, குழுவினர் கலந்தாய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி பகுதியில் கேரள வாடல் நோய், வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வகையில், தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. அதிக பாதிப்புள்ள பகுதிகளில், அனுசரணை ஆராய்ச்சி திடல் அமைக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாடு முறைகளை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில், இந்த திடல்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில், மொத்தம், 100 ெஹக்டேர் பரப்பில் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படுகிறது. இதுகுறித்து, அரசுகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
தோட்டக்கலைத்துறை இயக்குனர் புவனேஸ்வரி, உதவி இயக்குனர்கள் வசுமதி, ராதாகிருஷ்ணன், கோபிநாத், சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.