/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரள வேர் வாடல் நோய்: இன்று கணக்கெடுப்பு கேரள வேர் வாடல் நோய்: இன்று கணக்கெடுப்பு
கேரள வேர் வாடல் நோய்: இன்று கணக்கெடுப்பு
கேரள வேர் வாடல் நோய்: இன்று கணக்கெடுப்பு
கேரள வேர் வாடல் நோய்: இன்று கணக்கெடுப்பு
ADDED : பிப் 12, 2024 12:42 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கேரளா வேர் வாடல் நோய் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு பணிகள் இன்று நடக்கிறது.
தெற்கு ஒன்றிய தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி வெளியிட்ட அறிக்கை:
தென்னை வேர் வாடல் நோய் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறையினரால் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
இன்று, அம்பராம்பாளையம், சிங்காநல்லுார், ஜமீன் ஊத்துக்குளி (நஞ்சேகவுண்டன்புதுார், குஞ்சிபாளையம்), நாயக்கன்பாளையம், வக்கம்பாளையம் கிராமங்களில் சர்வே நடத்தப்படும். இப்பணியை பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜ கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
மாநில, மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கு அடிப்படை விபரம் தேவைப்படுவதால், சர்வே நடத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்களது விபரத்தை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.