ADDED : ஜூன் 04, 2025 12:41 AM
கோவை:
தி.மு.க., வக்கீல்கள் சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினவிழா, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன் நேற்று நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., சட்டத்துறை மாநிலஇணை செயலாளர்கள் அருள்மொழி, தண்டபாணி, அரசு வக்கீல்கள் ரவிச்சந்திரன், அருள் குமார், கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க., மாவட்ட செயலாளர் கார்த்திக் மற்றும் தி.மு.க., வக்கீல்கள் பங்கேற்றனர்.