/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு வெள்ளி மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு வெள்ளி
மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு வெள்ளி
மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு வெள்ளி
மாநில அளவிலான வாலிபால்; கற்பகம் பல்கலைக்கு வெள்ளி
ADDED : மார் 25, 2025 05:57 AM
கோவை; மாநில அளவிலான வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி இரண்டாம் பரிசு வென்றது.
மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையே, டி.எஸ்.சவுந்தரம் நினைவு வாலிபால் போட்டி, திண்டுக்கல் காந்திகிராம பல்கலையில் நான்கு நாட்கள் நடந்தது. இதில், தமிழகத்தில், 10 சிறந்த கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன.
'நாக் அவுட்' முறையில் நடந்த இப்போட்டியின் அரை இறுதியில், அமெரிக்கன் கல்லுாரி அணியுடன், கற்பகம் பல்கலை அணி மோதியது. அப்போது, 3-2 என்ற செட் கணக்கில் வென்று, இறுதி போட்டிக்கு கற்பகம் பல்கலை அணி தகுதி பெற்றது.
இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் பல்கலை அணியுடன் மோதியது. பரபரப்பான ஆட்டத்தில், 3-2 என்ற செட் கணக்கில், வெற்றி வாய்ப்பை இழந்த கற்பகம் பல்கலை அணி, வெள்ளி பதக்கம் வென்றது. வெற்றி பெற்ற வீரர்களை, பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டினர்.