/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிடிபட்ட மண் லாரி 'ரிலீஸ்' நடவடிக்கை பற்றி 'கப்சிப்' பிடிபட்ட மண் லாரி 'ரிலீஸ்' நடவடிக்கை பற்றி 'கப்சிப்'
பிடிபட்ட மண் லாரி 'ரிலீஸ்' நடவடிக்கை பற்றி 'கப்சிப்'
பிடிபட்ட மண் லாரி 'ரிலீஸ்' நடவடிக்கை பற்றி 'கப்சிப்'
பிடிபட்ட மண் லாரி 'ரிலீஸ்' நடவடிக்கை பற்றி 'கப்சிப்'
ADDED : மே 24, 2025 11:42 PM
அன்னூர்: குப்பனூர் ஊராட்சி, சொலவம்பாளையத்தில், வடக்கு வருவாய் ஆய்வாளர் குருநாதன் தலைமையில், வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது வந்த லாரியில், கல், மண் உள்ளிட்ட கனிம வளம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து வாகனத்தை அன்னூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இந்நிலையில் மறுநாள் அந்த மண் லாரி விடுவிக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து அன்னூர் தாசில்தார் யமுனாவிடம் கேட்டபோது, ''அந்த லாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என தெரிவித்தார்.
எனினும், என்ன நடவடிக்கை, எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது, என்பது உள்ளிட்ட தகவல்களை, வருவாய் துறையினர் தெரிவிக்கவில்லை.வழக்கமாக, அனுமதியின்றி மண் ஏற்றி வரும் லாரி பிடிபட்டால், அதிக தொகை அபராதம் விதிக்கப்படும்.
அபராத தொகை செலுத்திய பிறகே லாரி விடுவிக்கப்படும். எனினும், அந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படவில்லை என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.