/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கக்கன் திறந்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்கக்கன் திறந்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
கக்கன் திறந்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
கக்கன் திறந்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
கக்கன் திறந்த 'ஆவின்' குளிரூட்டு நிலையம் மூடல்
ADDED : பிப் 06, 2024 03:05 AM

பல்லடம்: கோவை மாவட்டம், சூலுார் தாலுகா, சுல்தான்பேட்டையில், 'ஆவின்' நிறுவனம் சார்பில், பால் குளிரூட்டும் நிலையம் செயல்பட்டது. 1963ம் ஆண்டு, காமராஜர் முதல்வராக இருந்தபோது, அப்போதைய அமைச்சர் கக்கன் மூலம் திறக்கப்பட்டது. தற்போது இது மூடப்பட்டுள்ளது.
ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியார் நிறுவனங்கள், 40 ரூபாய்க்கு மேல் வழங்குவதால், பெரும்பாலான விவசாயிகள், ஆவினுக்கு வழங்குவதை நிறுத்தி விட்டனர்.
இங்கு, 40,000 லிட்டர் வரை குளிரூட்டும் வசதி உள்ள போதிலும், பால் வரத்து, தினசரி, 8,000 லிட்டர் ஆக குறைந்து விட்டது.
குறைவான பாலை குளிரூட்ட கூடுதல் செலவாகும் என்பதால், ஆவின் அதிகாரிகள் உத்தரவுப்படி, தற்காலிகமாக நிலையம் மூடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.