Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று வேலை வாய்ப்பு முகாம்; வாய்ப்பை பயன்படுத்துங்க

இன்று வேலை வாய்ப்பு முகாம்; வாய்ப்பை பயன்படுத்துங்க

இன்று வேலை வாய்ப்பு முகாம்; வாய்ப்பை பயன்படுத்துங்க

இன்று வேலை வாய்ப்பு முகாம்; வாய்ப்பை பயன்படுத்துங்க

ADDED : செப் 18, 2025 10:42 PM


Google News
கோவை; தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான, செப்டம்பர் மாத சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், இன்று காலை 10:00 மணி முதல், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடக்கிறது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள், தங்களது சுய விபரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று, பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, பணிநியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. விருப்பமுள்ள மனுதாரர்கள், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரடியாக வரலாம். இத்தகவலை, கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us