/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
ADDED : ஜூன் 26, 2025 10:08 PM
தொண்டாமுத்துார்; பச்சாபாளையம், வி.எஸ்.வி., நகரை சேர்ந்தவர் சுமதி,53. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன்பின், சுமதி வீட்டில் தனியாக உள்ளார்.
கடந்த, 21ம் தேதி, சுமதி, சேலத்தில் உள்ள தனது மூத்த மகளின் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள விமலா என்பவர் சுமதியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சுமதி, பச்சாபாளையத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, மூன்றரை பவுன் நகை திருடு போயிருந்தது.
புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.