/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி விழா உற்சாகம் கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி விழா உற்சாகம்
கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி விழா உற்சாகம்
கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி விழா உற்சாகம்
கிருஷ்ணன் கோவிலில் ஜெயந்தி விழா உற்சாகம்
ADDED : செப் 16, 2025 07:38 AM

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரம் சலீவன் வீதியில் உள்ள வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோயிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ ஜெயந்தி உற்சவமான நேற்று காலை, சுவாமிக்கு திருப்பள்ளி எழுச்சி, நித்யஅனுஷ்டான பூஜைகள் நடந்தன. காலை 10 மணிக்கு உற்சவர் வாசுதேவருக்கு ஸ்நபன திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் வழிபாடு நடந்தது.
பாகவத கோஷ்டிகளின் திவ்யபிரபந்த சேவாகாலம் பாராயணம் நடந்தது. இரவு 7 மணிக்கு, உற்சவர் பாலகிருஷ்ணனாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.