Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்

5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்

5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்

5 தாலுகாக்களில் ஜமாபந்தி; 678 மனுக்கள் வழங்கல்

ADDED : மே 23, 2025 07:22 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம், 220 மனுக்கள் பெறப்பட்டன.

பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஜமாபந்தி நடக்கிறது. பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது. தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை வகித்தார்.

முதியோர் உதவித்தொகை, விதவைச்சான்று, நத்தம் பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளி உபகரணம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம், 118 மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

* ஆனைமலை தாலுகாவில், கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு நேற்று ஜமாபந்தி நடந்தது. அதில், நத்தம் பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 102 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். நேற்றுடன் ஆனைமலை தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு பெற்றது.

*கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில், கோவில்பாளையம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் (பொறுப்பு) விஸ்வநாதன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில், கிணத்துக்கடவு தாசில்தார் கணேஷ்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மக்கள் பங்கேற்று பட்டா மாறுதல், பொது பிரச்னைகள் குறித்து மொத்தமாக, 78 மனுக்கள் வழங்கினார்கள். கிணத்துக்கடவு தாலுகாவில் நேற்றுடன் ஜமாபந்தி நிறைவடைந்தது.

* உடுமலை தாலுகாவிற்கான ஜமாபந்தி, திருப்பூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில், நேற்று, குறிச்சிக்கோட்டை உள்வட்டத்துக்கு நடந்தது.

இதில், வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றம் என, பொதுமக்களிடமிருந்து, 183 மனுக்கள் பெறப்பட்டன.

ஜமாபந்தியில் தொழிலாளர்கள் மனுவில், உடுமலை ஒன்றியத்திலுள்ள, 38 ஊராட்சிகளில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முழுமையாக பணி வழங்காமல், ஒரு சிலருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது.

கடந்தாண்டு பணியாற்றிய தொழிலாளர்களுக்கு, உரிய ஊதியம் வழங்காமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கவேண்டும். அவர்களுக்கு வேலை தரும் வரை நிவாரணம் வழங்கவேண்டும், என, தெரிவித்துள்ளனர்.

*மடத்துக்குளம் தாலுக்காவுக்கான ஜமாபந்தி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. நேற்று, துங்காவி உள்வட்ட பகுதி மக்கள் பங்கேற்று 197 மனுக்கள் அளித்தனர்.

இன்றைய ஜமாபந்தி!

பொள்ளாச்சி தாலுகாவில், பெரிய நெகமம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி, பெரிய நெகமம், சந்திராபுரம், சின்ன நெகமம், மூலனுார், கொண்டேகவுண்டன்பாளையம், ஆவலப்பம்பட்டி, ஆ. நாகூர், கொல்லப்பட்டி, போலிக்கவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, பூசாரிப்பட்டி கிராமங்களுக்கு இன்று ஜமாபந்தி நடக்கிறது.உடுமலை தாலுகாவில், பெரிய வாளவாடி உள்வட்டத்திற்குட்பட்ட, வலையபாளையம், எரிசனம்பட்டி, கொடுங்கியம், தின்னப்பட்டி, சர்க்கார்புதூர், ரெட்டிபாளையம், ஜிலேபி நாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம், சின்னப்பாப்பனுாத்து, பெரியபாப்பனுாத்து, உடுக்கம்பாளையம், புங்கமுத்துார், செல்லப்பம்பாளையம், தேவனுார்புதுார், ராவணாபுரம், பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு இன்று நடக்கிறது.



- நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us