ADDED : செப் 08, 2025 10:54 PM
கோவை; ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், கோவை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பங்களிப்புடன் கூடிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், பள்ளி கல்வித்துறை அரசாணை எண் 243ஐ ரத்து செய்தல், இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்துதல், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.