/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வண்ணங்களால் வீட்டின் உள்ளே மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம்!வண்ணங்களால் வீட்டின் உள்ளே மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம்!
வண்ணங்களால் வீட்டின் உள்ளே மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம்!
வண்ணங்களால் வீட்டின் உள்ளே மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம்!
வண்ணங்களால் வீட்டின் உள்ளே மாற்றம் ஏற்படுத்துவது சாத்தியம்!
ADDED : ஜன 06, 2024 12:38 AM

நாம் வசிக்கும் வீடுகளுக்கும், அதனுள் அமைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்கும் எப்படிப்பட்ட வண்ணங்களையும் தேர்வு செய்யலாம்.
அதன் வாயிலாக கிடைக்கும் நற்பலன்கள் என்ன என்பது குறித்து, கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கம் (கொஜினா) சங்கத்தின் பொறியாளர் ஆனந்த் குமார் கூறியதாவது:
எந்த ஒரு பொருளை தேர்வு செய்தாலும், அதற்கு ஒரு வகையான வண்ணத்தை தேர்வு செய்து பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு வண்ணங்களும், ஒவ்வொரு தனித்தன்மையை வெளிப்படுத்துகிறது என, வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், நாம் வசிக்கும் இல்லத்துக்கு எந்த ஒரு வகை வண்ணத்தை தேர்வு செய்ய வேண்டும். வாஸ்து முறைப்படி அமைத்துக் கொள்வதன் மூலம், மன அமைதி புத்துணர்வை பெற இயலும்.
இதன் வாயிலாக, வசிக்கும் வீட்டின் எந்த ஒரு பகுதியிலும், அதனுள் இருக்கும் அறையிலும் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை வெளிப்படும். அதற்கு தகுதியான வண்ணங்கள் ஆரஞ்சு, ஊதா, பச்சை, மஞ்சள் போன்றவற்றால் பெற முடியும்.
படுக்கை அறையில் வெளிர் நிற சிவப்பு, ஊதா, ரோஸ் போன்ற வண்ணங்கள் வாயிலாக, மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் எளிதாக உணர முடியும்.
சமையலறையில் வெளிர் பச்சை, சாம்பல் மற்றும் எலுமிச்சை மஞ்சள் வண்ணங்கள் மூலம், நேர்மறை ஆற்றல் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் எளிதாக பெற முடியும்.
பூஜை அறைகளில் மஞ்சள், சிவப்பு வண்ணங்களை பயன்படுத்துவதன் மூலம், ஆன்மிக சிந்தனை மேம்படும். உணவு அருந்தும் அறையில் வானத்திற்கான நீலம், கிரீமி, வெளிர் மஞ்சள், ரோஸ் வண்ணங்களை பயன்படுத்தலாம்.
மற்ற அறைகளில் சாம்பல், வெள்ளை, பச்சை ஆகிய வெளிர் வண்ணங்களின் மூலம் சுகாதாரமாக அமைத்து கொள்ளலாம். வீடுகளின் உட்புறம் வெளிர் வண்ணங்களையும், வெளிப்புறம் அடர்த்தியான வண்ணங்களையும், அமைத்திட வேண்டும். வீட்டின் உட்புறம் மேற்பரப்பில், வெள்ளை நிறங்களை பயன்படுத்துவதன் மூலம், வெளிச்சத்தை பெற இயலும்.
வீட்டின் மேற்கூரையில், நீர் புகா பெயின்டுகளை பயன்படுத்தும் பொழுது சூரிய ஒளியின் வெப்பம், நீர்க்கசிவு, போன்றவற்றை தடுத்தால், கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்க முடியும். பராமரிப்பு செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு அறையிலும், வண்ணங்கள் மூலம் அலங்காரம் செய்து, வெளிப்புற முகப்பு தோற்றத்தினையும் மேம்படுத்தலாம்.
இவ்வாறு, அவர்கூறினார்.