/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவர்கள் தங்கள் உடல் மனநலனை பாதுகாப்பது முக்கியம் மருத்துவர்கள் தங்கள் உடல் மனநலனை பாதுகாப்பது முக்கியம்
மருத்துவர்கள் தங்கள் உடல் மனநலனை பாதுகாப்பது முக்கியம்
மருத்துவர்கள் தங்கள் உடல் மனநலனை பாதுகாப்பது முக்கியம்
மருத்துவர்கள் தங்கள் உடல் மனநலனை பாதுகாப்பது முக்கியம்
ADDED : ஜூன் 30, 2025 11:04 PM

இந்திய மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்து, பி.எஸ்.ஜி., சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் புவனேஸ்வரன் கூறியதாவது:
இந்திய மருத்துவ தினம், அதாவது தேசிய மருத்துவர்கள் தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி(இன்று) கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்காகன தேசிய மருத்துவர்கள் தினத்தின் கருப்பொருளாக, 'முகமூடிக்குப் பின்னால்: பராமரிப்பாளர்களைப் பராமரித்தல்', ஆகும். இது, மருத்துவர்களின் கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும், அதே நேரத்தில் அவர்களின் உடல் மற்றும் மனநலனையும் கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
ஒரு மருத்துவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டாலும், அவர்களின் உடல் மற்றும் மனநலன் பாதிக்கப்படாமல் இருப்பதும், அதைப் பாதுகாப்பதும் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது.
மருத்துவர்கள் தங்கள் உடல், மனநலனை பாதுகாப்பதையும், சமுதாயத்தில் அவர்கள் மதித்து நடப்பதையும் உறுதிசெய்வது அவசியமாகியுள்ளது.அரசு, நிர்வாகம், சமுதாயம் இணைந்து மருத்துவர்களுக்கு தேவையான அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.