Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விண்ணப்பம் அளிப்பதும் அவசியம்

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விண்ணப்பம் அளிப்பதும் அவசியம்

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விண்ணப்பம் அளிப்பதும் அவசியம்

பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் விண்ணப்பம் அளிப்பதும் அவசியம்

ADDED : ஜூன் 20, 2025 02:24 AM


Google News
பொள்ளாச்சி : பள்ளி மாணவர்களுக்கு, பஸ் பாஸ் பெறுவதற்கு 'எமிஸ்' தளத்தில் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டாலும், போட்டோவுடன் கூடிய விண்ணப்பப் படிவம் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக, இலவச பஸ் பாஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்காக, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அந்தந்த பள்ளியில், மாணவ, மாணவியர் பெயர், முகவரி, எங்கிருந்து, எங்கு பயணிக்க வேண்டும் என்ற விபரங்கள், தலைமை ஆசிரியர் வாயிலாக சேகரம் செய்யப்பட்டு, போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கப்பட்டு வந்தது.

அவர்கள் பஸ் வழித்தடத்துக்கு ஏற்ப விண்ணப்பித்தவருக்கு பாஸ் வழங்கியும் வந்தனர். அதேநேரம், கடந்தாண்டு, மாணவ, மணவியரின் விபரம் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதனைப் பயன்படுத்தி, அரசு போக்குவரத்து கழகம் வாயிலாக பஸ் பாஸ் வழங்கப்பட்டது.

இதற்காக, மாணவர்களிடம் விண்ணப்பம் கோரப்படாமல் இருந்தது. ஆனால், நடப்பாண்டு, போட்டோவுடன் கூடிய விண்ணப்பம் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு மாணவர், பெயர், போட்டோ, வகுப்பு, பள்ளி, முகவரி, எங்கிருந்து எங்கு பயணிக்கிறார் என்ற விபரம் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற செய்யப்படும். அந்த விபரம், அந்த மாணவர்களின் ஊருக்கு சென்று திரும்பும் பஸ்சுக்குரிய பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேநேரம், போட்டோவை உள்ளடக்கிய விண்ணப்பப் படிவம் அளிப்பதும் அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, எத்தனை மாணவர்கள் அரசு பஸ்சில் பயணிக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப பள்ளிக் கல்வித்துறையில் இருந்து, அரசு போக்குவரத்து கழகத்திற்கு உரிய தொகை விடுவிக்கப்படும்.

ஜூலை மாதத்தில் இருந்து பஸ் பாஸ் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுவரை, கடந்தாண்டு பஸ் பாஸ், சீருடை மற்றும் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து பயணிக்க மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us