Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளை இஸ்கான் தேர்த்திருவிழா; தேர்முட்டி வீதியில் நடத்த ஏற்பாடு

நாளை இஸ்கான் தேர்த்திருவிழா; தேர்முட்டி வீதியில் நடத்த ஏற்பாடு

நாளை இஸ்கான் தேர்த்திருவிழா; தேர்முட்டி வீதியில் நடத்த ஏற்பாடு

நாளை இஸ்கான் தேர்த்திருவிழா; தேர்முட்டி வீதியில் நடத்த ஏற்பாடு

ADDED : ஜூலை 03, 2025 09:07 PM


Google News
கோவை; அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) நடத்தும் தேர்த்திருவிழா, கோவையில்,நாளை (5ம் தேதி, சனிக்கிழமை) மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை நடக்கிறது.

கோவை தேர்முட்டி வீதியில், நாளை மதியம், 2:00 மணிக்கு தேர்த்திருவிழா துவங்கும். ஸ்ரீ ஜெகன்னாதர், பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியார் விக்ரகங்களுடன் பிரம்மாண்டமான தேர், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்ப கவுண்டர் வீதி வழியாக வலம் வந்து மீண்டும் தேர்முட்டியை வந்தடையும்.

மூல விக்ரகங்களே தேரில் பவனி வரும் சிறப்பு ஸ்ரீஜெகன்னாதர் தேர்த்திருவிழாவில் மட்டுமே நடைபெறும். இயக்கத்தின் மண்டல செயலாளர் வினோத சுவாமி தலைமையில் இவ்விழா நடக்கிறது.

ரத யாத்திரையின்போது கலை, கலாசாரத்தை பறைசாற்றும் விதத்தில் சிறப்பு பஜனை, ஹரி நாம சங்கீர்த்தனம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரத யாத்திரைக்கு பின், ஜெகன்னாதர் ஆலயத்தில் அருள்பாலிக்க உள்ள மூல விக்ரகங்களுக்கு இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெறும். அதன்பின், சொற்பொழிவு, நாமசங்கீர்த்தனம் மற்றும் பிரசாதம் வினியோகிக்கப்படும்.

விவரங்களுக்கு 77083 58616, 90423 93954, 96777 57925 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, இஸ்கான் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us