/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கிராமங்களில் குடிநீர் பிரச்னையா? வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம் கிராமங்களில் குடிநீர் பிரச்னையா? வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்
கிராமங்களில் குடிநீர் பிரச்னையா? வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்
கிராமங்களில் குடிநீர் பிரச்னையா? வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்
கிராமங்களில் குடிநீர் பிரச்னையா? வாட்ஸ்அப்பில் புகார் தெரிவிக்கலாம்
ADDED : ஜூன் 11, 2025 09:02 PM
அன்னுார்; 'குடிநீர் பிரச்னை குறித்து வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்,' என ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1500க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, குப்பைகள் அகற்றாதது, தெருவிளக்கு பழுது என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதையடுத்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில், வாட்ஸ் அப்பில் போட்டோ வாயிலாக எளிதாக புகார் தெரிவிக்க ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணில் 'வாட்ஸ் அப்' வாயிலாக போட்டோவுடன் புகார் தெரிவிக்கலாம். ஊரக வளர்ச்சித் துறையின் அறிக்கை :
அன்னுார் ஊராட்சி ஒன்றியத்திற்கு 99765 50973, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு 97868 96660, சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்திற்கு 74029 05147, சூலூர் ஒன்றியத்திற்கு 74029 05170, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு 99762 50205, சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு 74029 05203, மொபைல் எண்களில் வாட்ஸ்அப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.