/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
ADDED : மார் 20, 2025 11:41 PM
அன்னுார்: அன்னுாரில் மனவளக்கலை பயிற்சி வகுப்பு வரும் 24ம் தேதி துவங்குகிறது.
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த, முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா என்னும் 12 நாள் பயிற்சி வகுப்பு அன்னுாரில் வருகிற 24ம் தேதி துவங்குகிறது.
அன்னுார் அ.மு. காலனியில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், 24ம் தேதி மாலை 4:00 மணிக்கு அறிமுக வகுப்பு நடைபெறுகிறது. இதில் எளிய முறை யோகா, காயகல்பம், உடற்பயிற்சி மற்றும் தியானம் கற்பிக்கப்படும்.
இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக, உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திலும், சமூகத்திலும், அமைதியும் இனிமையும் பெருகும். அறிவு கூர்மை பெருகி, ஒழுக்க பழக்கங்கள் மேம்படும்.
'வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் 97899 88949 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.