/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மானியத்தில் பருத்தி விதை பெற அழைப்பு மானியத்தில் பருத்தி விதை பெற அழைப்பு
மானியத்தில் பருத்தி விதை பெற அழைப்பு
மானியத்தில் பருத்தி விதை பெற அழைப்பு
மானியத்தில் பருத்தி விதை பெற அழைப்பு
ADDED : ஜூன் 17, 2025 09:26 PM
அன்னுார்; அன்னுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை :
தற்போது மழை பெய்து வருகிறது. பருத்தி விதைப்புக்கு உகந்த காலம். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில், 50 சதவீத மானியத்தில் பருத்தி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
பருத்தி விதை விலை 198 ரூபாய். மானியம் 99 ரூபாய் போக, மீதி 99 ரூபாய் செலுத்தினால் போதும். தற்போது பருவமழை பெய்வதால் மானியத்தில் பருத்தி விதை பெற்று விதைத்து பயன்பெற விவசாயிகள் முன் வரவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.