Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

பள்ளி, கல்லுாரிகளில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

ADDED : ஜூன் 22, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
பெ.நா.பாளையம்: கோவை புறநகரில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகாசன பயிற்சி நடந்தது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் சார்பில், 11வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மாருதி உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் ஜெயபால் வரவேற்றார். இதில், 900-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று யோகாசனங்களை செய்தனர். இணை பேராசிரியர் அமுதன் நன்றி கூறினார்.

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இதில், முதன்மையர் கிரிதரன் வரவேற்றார். ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமை வகித்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். சிறப்பு கல்வியியல் புலத்தின் முதன்மைர் முத்தையா நன்றி கூறினார்.

துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா பயிற்சி நடந்தது. இதில், திரளான மாணவ, மாணவியர் பங்கேற்று பல்வேறு யோகாசனங்களை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் செய்து இருந்தார்.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி கேலக்ஸி சமுதாய குழுவும் இணைந்து பெண்கள் பங்கேற்ற யோகா பயிற்சி வகுப்புகள் நடந்தன. இந்நிகழ்ச்சியில், 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.

நாயக்கன்பாளையத்தில் உள்ள ஜீவகாருண்ய சேவா ஆசிரமத்தில் பல்வேறு யோகா பயிற்சிகளை ஆசிரம மாணவர்கள் செய்தனர். பெட்டதாபுரம் நடுநிலைப் பள்ளியில் யோகா போட்டிகள் நடந்தன. தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் சசிகலா ஆகியோர் யோகா போட்டிகளை நடத்தினர். யோகா குறித்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இளம் மருத்துவர்கள் கமல், தக்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சிவகுமார், யுனைடெட் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் விஜயா உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு யோகா தின போட்டிகள் நடந்தன. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரேம்நாத், உடற்கல்வி ஆசிரியர் தனக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அன்னுார்


அன்னுார் மனவளக்கலை மன்றம் சார்பில், அன்னுாரில், தாசபளஞ்சிக மண்டபத்தில் யோகா தின விழா நடந்தது.

மன்றத் தலைவர் பேராசிரியர் தாமரை முருகேசன் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பல்வேறு யோகாசனங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. மன்ற செயலாளர் திருவேங்கடம், துணைத்தலைவர் வரதராஜ், துணை பேராசிரியர் தேவகி திருவேங்கடம் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us