Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பன்னாட்டு கருத்தரங்கம் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு

பன்னாட்டு கருத்தரங்கம் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு

பன்னாட்டு கருத்தரங்கம் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு

பன்னாட்டு கருத்தரங்கம் ஆய்வு கட்டுரைகள் சமர்பிப்பு

ADDED : அக் 17, 2025 11:09 PM


Google News
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியில், தமிழ் துறையும், சென்னை தமிழ் சங்கம் சார்பில், இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. முனைவர் ராஜா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வனிதாமணி முன்னிலை வகித்தார்.

கல்லுாரி தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்து பேசினார். சென்னை தமிழ் சங்கத்தின் தலைவர் ேஹமலதா, கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார்.

இணைய வழியில், மலேசியா கல்வி மேம்பாட்டு கழக தலைவர் ராஜகோபால் பொன்னுசாமி பேசினார்.தமிழ்நாடு மட்டுமின்றி, பெங்களூரு, பிரான்ஸ், ரஷ்யா, மலேசியா, அபுதாபி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் வரப்பெற்றன.

முனைவர்கள் ராஜலதா, ராஜிவ்காந்தி, பத்மினி ஆகியோர் அமர்வு தலைவர்களாக கொண்டு மூன்று அமர்வுகளாக ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. தமிழ் துறை தலைவர் மலர்விழி நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us