/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மக்களை மகிழ்விக்க சர்வதேச கிளவுன் கலை விழா!கோவை மக்களை மகிழ்விக்க சர்வதேச கிளவுன் கலை விழா!
கோவை மக்களை மகிழ்விக்க சர்வதேச கிளவுன் கலை விழா!
கோவை மக்களை மகிழ்விக்க சர்வதேச கிளவுன் கலை விழா!
கோவை மக்களை மகிழ்விக்க சர்வதேச கிளவுன் கலை விழா!
ADDED : ஜன 11, 2024 12:26 AM
கோவை : கோவையில் முதல் முறையாக, புரோஜோன் மாலில், உலக புகழ்பெற்ற கலைஞர்களின் சர்வதேச கிளவுன் கலை விழா வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது.
இது குறித்து, புரோஜோன் மாலின் இயக்குனர் விஜய் பாடியா, நிதி மற்றும் நிர்வாக தலைவர் பாபு கூறுகையில், ''சத்தி ரோட்டில் அமைந்துள்ள புரோஜோன் மாலில், வரும் 13, 14ம் தேதிகளில், உலக அளவில் புகழ்பெற்ற ரெட் நோஸ் மற்றும் பிக் டீயர்ஸ் குழுவினர் பங்கேற்கும், சர்வதேச கிளவுன் கலை விழா நடக்கிறது.
மதியம் 3:00 மணி, மாலை 5:00 மணி மற்றும் இரவு, 7:00 மணி என மூன்று நிகழ்வுகளாக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேஜிக் ஷோ, மைம், மியூசிக், அக்ரோபெட் மற்றும் யூனி சைக்கிளிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மார்க்கெட்டிங் தலைவர் பிரிங்ஸ்டன் நாதன், செயலாக்கத் தலைவர் முசாமில் கூறுகையில், 'கிளவுன் கலை விழாவுக்கு, நுழைவு கட்டணமாக ரூ.199 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் குழுவாக வரும்போது கட்டணம், ரூ.99 மட்டுமே. டிக்கெட்கள் புரோஜோன் மால் வணிக வளாகத்திலும், ஸ்போர்பி இணையதளத்திலும் கிடைக்கும்' என்றனர்.
தினமலர் நாளிதழ் மற்றும் சந்திரமாரி சர்வதேச பள்ளி இணைந்து, இந்நிகழ்ச்சி வழங்குகின்றன.