/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை வார்டு தயார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை வார்டு தயார்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை வார்டு தயார்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை வார்டு தயார்
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை வார்டு தயார்
ADDED : ஜூன் 08, 2025 10:17 PM

மேட்டுப்பாளையம்; கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 4 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறியதாவது:-
கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். தற்போது பரவும் கொரோனா முன்பை போல் வீரியம் கொண்டது கிடையாது. எனினும் காய்ச்சல், சளி போன்றவைகள் இருந்தால் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. குறிப்பாக மருத்துக்கடைகளில் சுயமாக காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி உண்ணக்கூடாது.
பொது இடங்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது நல்லது. கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு அடிக்கடி கழுவுவது நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகள் பயப்பட வேண்டாம். காய்ச்சல் வந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இணை நோயாளிகள் கவனத்துடன் இருக்க வேண்டாம்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் நான்கு படுக்கைகளுடன் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துகளும் கையிருப்பில் உள்ளன. மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் எப்போதும் தயார் நிலையில் மருத்துவர்கள் இருப்பார்கள். சத்துள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.