ADDED : செப் 14, 2025 01:53 AM

போத்தனுார்:கோவை அருகே வெள்ளலுார் செல்லும் வழியில், மகாலிங்கபுரத்தில், மங்கள விநாயகர் கோயில் உள்ளது.
இவ்வளாகத்தில் ஆறடி உயரத்தில், புதிதாக வாராகி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.