/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க வலியுறுத்தல்சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க வலியுறுத்தல்
சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க வலியுறுத்தல்
சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க வலியுறுத்தல்
சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வுக்கு பிளக்ஸ் பேனர் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2024 09:17 PM
உடுமலை -உடுமலை அடுத்த தளி முதல் திருமூர்த்தி அணை வரை, சுற்றுலாப்பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பிளக்ஸ் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
வார விடுமுறை நாட்களில், உடுமலை அடுத்த திருமூர்த்தி அணைக்கு, சுற்றுலாப்பயணியரின் வருகை அதிகரித்து காணப்படும்.
அங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யும் அவர்கள், அருகேயுள்ள அணையின் கரையோரத்திலும் 'விசிட்' அடிக்கின்றனர்.
அவர்களில் சிலர், ரோட்டோரத்தில் மீதமான உணவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் டம்ளர் போன்ற பொருட்களையும் வீசி விடுகின்றனர். அதேபோல், விஷமிகள் சிலர், மதுகுடித்து விட்டு பாட்டில்களையும் அங்கேயே விட்டுச்செல்கின்றனர்.
இதனால், சுற்றுப்புறம் மாசடைந்து, துார்நாற்றம் வீசுகிறது. அவைகளை அகற்ற, போதிய துாய்மை பணியாளர்களும் கிடையாது.
சுற்றுலாப்பயணியரின் இத்தகைய அத்துமீறலை, துறை ரீதியான அதிகாரிகள் கண்டறிந்து தடுக்க வேண்டும்.
தளி முதல் திருமூர்த்திஅணை வரை, விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சுற்றுலாப் பயணியர் பலர், அணை சுற்றுப்பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி, உணவு உட்கொள்கின்றனர். பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் குப்பை, விட்டுச் செல்லப்படுகின்றன.
சில பகுதிகளில் மதுபாட்டில்கள் சேகரமாகிறது. இயற்கை சூழல் நிறைந்த பகுதியை அசுத்தப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு, மது அருந்தக்கூடாது; பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் வீசக்கூடாது என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும். அத்துடன் அபராதத்தொகையையும் குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.