/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில்களில் ஹிந்து பாரம்பரிய உடை அணிந்து வர வலியுறுத்தல் கோவில்களில் ஹிந்து பாரம்பரிய உடை அணிந்து வர வலியுறுத்தல்
கோவில்களில் ஹிந்து பாரம்பரிய உடை அணிந்து வர வலியுறுத்தல்
கோவில்களில் ஹிந்து பாரம்பரிய உடை அணிந்து வர வலியுறுத்தல்
கோவில்களில் ஹிந்து பாரம்பரிய உடை அணிந்து வர வலியுறுத்தல்
ADDED : ஜூன் 01, 2025 11:30 PM

பொள்ளாச்சி : அனைத்து கோவில்களிலும், ஆண்கள், பெண்கள் ஹிந்து பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டன.
அனைத்து ஹிந்து திருக்கோவில்கள் கூட்டமைப்பு, மாநில செயற்குழு கூட்டம், பொள்ளாாச்சி, நடுப்புணி ரோடு தனியார் மண்டபத்தில் நடந்தது. அகில பாரத தலைவர் சிவபிரசாத், தலைமை, தேசிய துணை தலைவர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அன்புராதாகிருஷ்ணன், வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன்சம்பத், மலுமிச்சம்பட்டி நாகசத்தி பீடம் ஜகத்குரு சண்முகசுந்தரபாபுஜிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், செயல்படாத நிர்வாகிகளை நீக்க வேண்டும். பிரதிமாதம் தோறும், அந்தந்த மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கை தலைமைக்கும், அறிவிக்கப்பட்ட குழுவிற்கும் அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும்.
பராமரிப்பில்லாத புராதன கோவில்களை உடனடியாக புனரமைப்பு செய்து, கும்பாபிேஷகம், செய்ய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். ஹிந்து கோவில்கள் வாயிலாக பெறப்படும் நிதியை ஹிந்துக்களின் நலன், கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அனைத்து கோவில்களிலும், ஆண்கள், பெண்கள் ஹிந்து பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.