/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீடு, வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக அப்பாவிகளிடம் வசூல் வீடு, வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக அப்பாவிகளிடம் வசூல்
வீடு, வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக அப்பாவிகளிடம் வசூல்
வீடு, வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக அப்பாவிகளிடம் வசூல்
வீடு, வீட்டுமனை பட்டா பெற்று தருவதாக அப்பாவிகளிடம் வசூல்
ADDED : ஜூன் 04, 2025 12:55 AM
கோவை,; இலவச வீடு, வீட்டுமனை பட்டா வாங்கித்தருவதாக அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்து, கலெக்டரிடம் மனு கொடுக்க வைப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வீடு, வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு, அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கித்தருவதாக கூறி, சில அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பு நிர்வாகிகள், அப்பாவி மக்களிடம் நபர் ஒருவருக்கு, 500 - 1000 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். விண்ணப்ப மனு தயாரித்து கொடுத்து அவற்றை, கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வலியுறுத்துகின்றனர்.
இது வாராவாரம் மக்கள் குறைதீர்ப்பு நாளன்று நடக்கிறது. ஏதுமறியா அப்பாவி மக்கள் பணத்தை கொடுத்து ஏமாறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள், கலெக்டரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். கலெக்டர் கூறுகையில், ''இது குறித்து விரிவாக விசாரணை செய்து, நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.