/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் பணி துவக்கம்பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் பணி துவக்கம்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் பணி துவக்கம்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் பணி துவக்கம்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2024 12:56 AM

கோவை:மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதும், 10 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு நேற்று முதல் கற்றல் கையேடுகள் வழங்கப்பட்டு வருகிறன.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 42 துவக்கப்பள்ளிகள், 11 உயர்நிலை, 14 நடுநிலை மற்றும், 17 மேல்நிலை பள்ளிகள் என, 84 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.
இந்நிலையில், 10ம் வகுப்பில், 2,059 பேருக்கும், பிளஸ்2 பயிலும், 1,644 பேருக்கும் கையேடுகள் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில், 3,590 கற்றல் கையேடுகள், ஆங்கில வழிக்கல்வியில், 7,015 கையேடுகள், பிளஸ்2 மாணவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில், 6,403, ஆங்கில வழிக்கல்விக்கு, 7,094 கையேடுகள் என, மொத்தம், 24 ஆயிரத்து, 102 கையேடுகள் வழங்கப்படுகின்றன.
ஏழை மாணவர்கள் பயன்பெறும் விதமாக, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.18.59 லட்சம் செலவிலும், பிளஸ்2 மாணவர்களுக்கு ரூ.14.84 லட்சம் செலவிலும், இக்கற்றல் கையேடுகள் நேற்று முதல் வழங்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.புரம், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், கல்விக் குழு தலைவர் மாலதி முன்னிலையில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் மாணவியருக்கு, கையேடுகள் வழங்கினார்.
இன்னும் ஓரிரு நாட்களில், அனைத்து மாணவர்களுக்கும் கையேடுகள் வழங்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.