/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மேட்டுப்பாளையம் மண்டிக்கு உருளை வரத்து குறைந்தது; மஹாராஷ்டிரா லாரி ஸ்டிரைக்கால் விலையும் அதிகரிப்புமேட்டுப்பாளையம் மண்டிக்கு உருளை வரத்து குறைந்தது; மஹாராஷ்டிரா லாரி ஸ்டிரைக்கால் விலையும் அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் மண்டிக்கு உருளை வரத்து குறைந்தது; மஹாராஷ்டிரா லாரி ஸ்டிரைக்கால் விலையும் அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் மண்டிக்கு உருளை வரத்து குறைந்தது; மஹாராஷ்டிரா லாரி ஸ்டிரைக்கால் விலையும் அதிகரிப்பு
மேட்டுப்பாளையம் மண்டிக்கு உருளை வரத்து குறைந்தது; மஹாராஷ்டிரா லாரி ஸ்டிரைக்கால் விலையும் அதிகரிப்பு
ADDED : ஜன 02, 2024 11:05 PM

மேட்டுப்பாளையம்;மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், உருளைக்கிழங்கு விலை உயர்த்தி விற்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன.
இங்கு, ஊட்டி, கோத்தகிரி, குன்னுார், கூடலூர், திம்பம், தாளவாடி, கேர்மாளம், உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், இந்துார், ஆக்ரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 1,000 முதல் 2,000 டன் வரை உருளைக்கிழங்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. தற்போது, மகாராஷ்டிரா மாநிலம் இந்துாரில் உருளைக்கிழங்கு சீசன் என்பதால் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு அதிகம் வருகின்றன.
இதற்கு அடுத்தப்படியாக ஊட்டி உருளைக்கிழங்குகள் வருகின்றன. இந்துார் உருளைக்கிழங்குகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்துக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி ஸ்டிரைக் என்பதால் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு இந்துாரில் இருந்து உருளைக்கிழங்குகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உருளைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. இது குறித்து உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர் பாபு கூறியதாவது: இந்துார் கிழங்குகள் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை தற்போது ரூ.900 முதல் 1,000 வரை விற்பனையாகிறது. தினமும் இந்துாரில் இருந்து 40 லோடுகள், அதாவது ஒரு லோடுக்கு 25 டன் வீதம் 1,000 டன் வர வேண்டும். ஆனால் மகாராஷ்டிராவில் லாரிகள் ஸ்டிரைக் காரணமாக, தற்போது 20 லோடு தான் வருகிறது.
வரத்து குறைவால் ரூ.800க்கு விற்கப்பட்ட மூட்டை, தற்போது ரூ.900 முதல் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வரத்து குறைந்தால் விலை மேலும் உயரும். ஊட்டி உருளைக்கிழங்குகள் மூட்டை ஒன்று ரூ.1,000 முதல் ரூ.1,600 வரை விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.