Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்

கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்

கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்

கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அக்கறை தொடர்ந்து வலியுறுத்தும் தொழில் அமைப்புகள்

ADDED : மே 22, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
கோவை, ; கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், எந்தெந்த துறைகளில் உடனடி கவனம் தேவை என்பதில், அக்கறை காட்டி வரும் கோவை தொழில் அமைப்புகள், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், இது குறித்து அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தொழில் நகரமான கோவை, சுயமாக வளர்ந்த நகராகும். இங்குள்ள மக்களின் தொழில் முனைவுத்திறன், ஜவுளித்துறை சார்ந்த தொழில் நகரம் என்ற நிலையில் இருந்து, உற்பத்தி, மருத்துவம், கல்வி, ஐ.டி., என பல்துறைகளிலும் வளர்ந்த நகராக மாற்றியுள்ளது. இதில், தொழில் அமைப்புகளின் பங்கு அளப்பரியது.

அரசுக்கு வலியுறுத்தல்


கோவை வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தை, தொழில் வர்த்தக சபை, சைமா, கொடிசியா, சி.ஐ.ஐ., உட்பட பல்வேறு தொழில் அமைப்புகளும், மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தங்களது துறைசார்ந்த கோரிக்கைகளை மட்டுமல்லாது, பொதுவான வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தையும், தொழில் அமைப்புகள் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. விமான நிலைய விரிவாக்கம், பல்லடுக்கு போக்குவரத்து முனையம், மெட்ரோ ரயில், மாஸ்டர் பிளான், பாலங்கள், புறவழிச் சாலைகள், தொழில்பூங்காக்கள் என தொடர்ந்து உடனடியாக கவனம் செலுத்த வேண்டியவை குறித்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றன.

கொடிசியா கடிதம்


சமீபத்தில், கொடிசியா சார்பில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், 'கோவை நகரை 6 தேசிய நெடுஞ்சாலைகள் கடக்கும் நிலையில், சாலை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். கிழக்கு புறவழிச்சாலை, மேற்கு புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 544ல், 95 கி.மீ., தூரத்தை ஆறு வழிப் பாதையாக மாற்ற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது.

சமீபத்தில், கைடன்ஸ் நிறுவன சி.இ.ஓ.,வுடன் நடந்த கூட்டத்தில், சி.ஐ.ஐ., தரப்பில், ஜி.சி.சி., லாஜிஸ்டிக்ஸ், செமிகண்டக்டர் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்படி கவனம் செலுத்தினால், மாநில ஜி.டி.பி.,யில் கோவையின் பங்களிப்பு 30 சதவீதம் வரை உயர்த்த முடியும் என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

கலெக்டர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இந்திய தொழில் வர்த்தகசபை சார்பில், விமானநிலைய விரிவாக்கம், விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கோவையில் தொழில்பூங்காக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், கிழக்கு புறவழிச்சாலை குறித்து வலியுறுத்தப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளுக்கும் பங்கு


இவ்வாறு, கோவையின் வளர்ச்சியில் தொழில் அமைப்புகள் அக்கறை காட்டி, தொடர்ந்து மத்திய மாநில அரசுகளிடம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து வலியுறுத்தி வருகின்றன.

தொழில் அமைப்பினர் காட்டும் அதே வேகத்தை, மக்கள் பிரதிநிதிகளும் காட்டினால், அடுத்த பல பத்தாண்டுகளின் வளர்ச்சிக்குத் தேவையான அடித்தளத்தை, மிக வலுவாக அமைக்க முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us