/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவில் நில சிட்டாவில் தனிநபர் பெயரை நீக்கணும்! கோவில் நில சிட்டாவில் தனிநபர் பெயரை நீக்கணும்!
கோவில் நில சிட்டாவில் தனிநபர் பெயரை நீக்கணும்!
கோவில் நில சிட்டாவில் தனிநபர் பெயரை நீக்கணும்!
கோவில் நில சிட்டாவில் தனிநபர் பெயரை நீக்கணும்!
ADDED : ஜூன் 17, 2025 09:08 PM

பொள்ளாச்சி; சோமந்துறைசித்துார் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிட்டாவில் உள்ள தனிநபர்கள் பெயரை நீக்கம் செய்ய வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனைமலை அருகே சோமந்துறைசித்துார் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்க வேண்டும் எனவும் சோமந்துறைசித்துார் கிராம பொதுநல அமைப்பினர், கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கோரிக்கை தொடர்பான கூட்டம் நடத்தப்பட்டது. கிராம பொதுநல அமைப்பின் தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். செயலாளர் சபாபதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், சோமந்துறைசித்துார் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிட்டாவில் உள்ள, தனிநபர்கள் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். கிராம வருவாய் ஆவணத்தில் உள்ளபடி மாறுதல் செய்ய வேண்டும்.
கிராம மக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்பின் பொருளாளர் சதீஷ்குமார், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.