Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாடக கலைஞர்களுக்கான உதவித்தொகையை உயர்த்துங்க!

நாடக கலைஞர்களுக்கான உதவித்தொகையை உயர்த்துங்க!

நாடக கலைஞர்களுக்கான உதவித்தொகையை உயர்த்துங்க!

நாடக கலைஞர்களுக்கான உதவித்தொகையை உயர்த்துங்க!

ADDED : மே 12, 2025 11:12 PM


Google News
பொள்ளாச்சி,;

நாடக கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார், என கோவை மாவட்ட நாடக கலை கழக நிறுவனர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நாடக கலை கழக நிறுவனர் சண்முகவடிவேல் அறிக்கை:

கோவை அரசு பொருட்காட்சியில், கோவை மாவட்ட நாடக கலைஞர்கள் கழகம் மற்றும் மூத்த முதியோர் பேரவை இணைந்து, முதல்வருக்கு பாராட்டு விழா நடத்துகிறது.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள, நாடக மற்றும் நாடக நடிப்பு கலைஞர்கள் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெரும்பாலான கலைஞர்களின் குடும்ப பெண்கள் பயன்பெறும் வகையில், மகளிர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்துள்ளார். முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது வரவேற்கதக்கது.

அதே போன்று, மாதாந்திர உதவித்தொகையை, மூவாயிரம் ரூபாயில் இருந்து, ஏழாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், என கோரிக்கை வைக்க உள்ளோம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us