ADDED : ஜூன் 06, 2025 05:52 AM
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட, இந்தாண்டு அதிகரித்துள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரபாண்டி, சின்னதடாகம், பன்னிமடை, உள்ளிட்ட பகுதிகளில் 72 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இதில், நடப்பாண்டுக்கான ஒன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது.
இது ஜூலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நடப்பாண்டு, 20 முதல், 30 மாணவ, மாணவியர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்' என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.