/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரத்தினம் கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்புரத்தினம் கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ரத்தினம் கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ரத்தினம் கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ரத்தினம் கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு
ADDED : ஜன 06, 2024 11:01 PM

கோவை;ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், செயற்கை நுண்ணறிவுதிறன் ஆய்வகத்தின் துவக்கவிழா நடந்தது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில் தலைமை வகித்தார்.
மாற்றம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் சுஜித் குமார், டெட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் அர்பிதா அகர்வால், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
சிறந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். ரத்தினம் கல்விக் குழுமங்களின் செயல் இயக்குனர் மாணிக்கம், துணைத் தலைவர் நாகராஜ், பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.