ADDED : செப் 09, 2025 10:45 PM
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கலிக்கநாயக்கன்பாளையம் 'டாஸ்மாக்' மதுக்கடை அருகே உள்ள புதரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, சிவகங்கையை சேர்ந்த கண்ணன்,40 மற்றும் சவுந்தரபாண்டியன்,37 ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம், 120 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.