/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'விளையாட்டில் சாதித்தால் வேலை வாய்ப்பு உண்டு' 'விளையாட்டில் சாதித்தால் வேலை வாய்ப்பு உண்டு'
'விளையாட்டில் சாதித்தால் வேலை வாய்ப்பு உண்டு'
'விளையாட்டில் சாதித்தால் வேலை வாய்ப்பு உண்டு'
'விளையாட்டில் சாதித்தால் வேலை வாய்ப்பு உண்டு'
ADDED : மார் 21, 2025 02:24 AM

மேட்டுப்பாளையம்: ''விளையாட்டுத் துறையில் சாதனை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உண்டு'' என ஐ.பி.எல்.,மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ஹரிநிஷாந்த் தெரிவித்தார்.
காரமடை, ஆர்.வி. கலை, அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு தினவிழா நடைபெற்றது. முதல்வர் ரூபா, ஆண்டறிக்கை வாசித்தார். நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், ஐ.பி.எல்.,மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ஹரிநிஷாந்த் பேசுகையில், ''கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நினைக்காமல் நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள். வாழ்க்கையில் மேம்பட நம் உடலையும், மனதையும், உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். விளையாட்டுத் துறையில் மாணவர்கள் தமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டுத் துறையில் சாதனை செய்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நிறைய உண்டு,'' என்றார்.
பின், ஹரிநிஷாந்த் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.
கல்லுாரியின் நிர்வாக மேலாளர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.