/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராத்திரி ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா... பார்த்து... பணம் பறிக்கற கும்பல் காத்திருக்கு! ராத்திரி ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா... பார்த்து... பணம் பறிக்கற கும்பல் காத்திருக்கு!
ராத்திரி ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா... பார்த்து... பணம் பறிக்கற கும்பல் காத்திருக்கு!
ராத்திரி ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா... பார்த்து... பணம் பறிக்கற கும்பல் காத்திருக்கு!
ராத்திரி ரயில்வே ஸ்டேஷன் போறீங்களா... பார்த்து... பணம் பறிக்கற கும்பல் காத்திருக்கு!
ADDED : ஜூன் 01, 2025 07:08 AM
கோவை : இரவு நேரங்களில் மது போதையில், ரயில் நிலையம் செல்வோரை குறி வைத்து, பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
பலர் வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்து தங்கியிருந்து வேலைக்கு செல்கின்றனர். வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை என விடுமுறை கிடைக்கும் போது சொந்த ஊருக்கு குடும்பத்தை சந்திக்க செல்கின்றனர்.
அதில் சிலர், இரவு நேரங்களில் ரயில் பயணத்திற்கு முன்பாக, அருகில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்று, மது அருந்திவிட்டு ரயில் ஏறுகின்றனர்.
அப்படி, மதுபோதையில் ரயில் ஏற செல்லும் வெளியூர் நபர்களை, பின்தொடர்ந்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மறித்து பணம், மொபைல் உள்ளிட்ட பொருட்களை ஒரு கும்பல் பறித்து செல்கிறது; இதனால், இரவு நேரங்களில் ரயிலில் செல்வோர் உஷாராக இருக்க வேண்டும் என, போலீசார் எச்சரிக்கின்றனர்.
இதேபோல், வெளியூர்களில் இருந்து, சமையல் வேலைக்காக வரும் நபர்களில் சிலர், வேலை இல்லாத நாட்களில், அரசு மருத்துவமனை அருகில் பிளாட்பாரத்தில் படுக்கின்றனர். இரவு நேரங்களில் அவர்களின் பாக்கெட்டில் இருக்கும் பணம், மொபைல் ஆகியவற்றை நோட்டமிட்டு திருடுகிறது மற்றொரு கும்பல்.
போலீசார் கூறுகையில், 'மது அருந்தி செல்வோரை மட்டும் குறி வைத்து வழிப்பறி செய்கின்றனர். அவர்களிடம் பெரிய அளவில் பணம் இருப்பதில்லை. ரூ. 500, ரூ. 1000 வழிப்பறி செய்து செல்கின்றனர். சிறு தொகை என்பதாலும், ரயிலுக்கு செல்ல வேண்டும் என்பதாலும், பலர் புகார் அளிக்க வருவதில்லை. இதனால், வழிப்பறி கும்பலை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. விரைவில் பிடித்து விடுவோம்' என்றனர்.